அதிமுகவில் தொடர்வதா அல்லது தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைவதா என்பது குறித்து சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நேற்று (மே 27) எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவருடன் சமரசமான நிலையில், சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோர் இன்னும் அவரை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயபாஸ்கரின் இந்த ஆலோசனை, அதிமுகவின் தற்போதைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.