இந்த கிராமத்தில் கடந்த 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி தற்போது அரசு பள்ளியில் இருக்கிறதா அரசு உதவி பெறும் பள்ளியில் இருக்கிறதா? அல்லது தனியார் பள்ளியா என்று தெரியவில்லை என்றும் பள்ளிக்கு கட்டடங்கள் இல்லாததால் கிராம சபை கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி படிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அதே போல் பள்ளிக்கு தலைமை ஆசிரியரே இல்லை என்றும் இருக்கும் இரண்டு ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கக்கூடிய நிலையில் தற்போது செயல்பட்டு வருக்கூடிய பள்ளியில் 39 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் அதனால் இப்பள்ளியை அரசு பள்ளியாக செயல்படுத்த வலியுறுத்தியும் பள்ளிக்குத் தேவையான கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி இன்று பள்ளி செயல்பட்டு வந்த கிராம சேவை மையக் கட்டடத்திற்கு பூட்டு போட்டு அப்பகுதியைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பாமல் பள்ளி திறப்பின் முதல் நாளான இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பள்ளிக்கு வந்த மாணவர்கள் அருகே உள்ள மரத்தடியில் அமர்ந்துள்ள நிலையில் இதுகுறித்து கல்வி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையுடன் காத்திருக்கின்றனர்.