புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் பழுதடைந்ததால், விமானி சாமர்த்தியமாக அதை சாலையில் தரையிறக்கினார். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், விமானத்தில் இருந்து பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.