தஞ்சை: நாயின் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் காயம்

மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (28), யமஹா பைக்கில் ஜன. 08 இரவு 10:30 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து மதுரைக்குச் சென்றுள்ளார். ஆதனக்கோட்டை அருகே சாலையில் குறுக்கே சென்ற நாயின் மீது மோதியதில் காயம் அடைந்த கார்த்திக் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். நேற்று (ஜன.9) அவரது மனைவி கலைவாணி (25), அளித்த புகாரின் பேரில் ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை செய்கின்றனர்.

தொடர்புடைய செய்தி