புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுக்காவில் உள்ள நார்த்தாமலை பகுதியில் நேற்று (நவ.12) காலை லோடு ஏற்றிச் சென்ற கனரக வாகனம் சாலை அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் இல்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வண்டியில் இருந்த மூட்டைகள் பள்ளத்தில் சாய்ந்து சேதமடைந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர்.