கீரனூர் அருகே மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கிருஷ்ணபாரபட்டியைச் சேர்ந்த அலெக்ஸ் (41) என்பவர் சாலையோரம் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி