புதுகை, குளத்தூர் அடுத்த களமாவூரை சேர்ந்தவர் சங்கிலி முத்து (82). இவர் களமாவூர் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனை அடுத்து சங்கிலி முத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அவர் அளித்த புகாரில் கீரனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.