புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்பிரச்சனைக்கு மின்சாரத் துறையினர் உடனடியாகத் தீர்வு கண்டு, தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்த தொடர் மின்வெட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிப்பதாகக் கூறப்படுகிறது.