கறம்பக்குடி: கெளரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்..

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ரூ. 50,000 வழங்க வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும், 12 மாதமும் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணி புரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியம் ரூ. 50,000 வழங்க வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும், 12 மாதமும் ஊதியம் வழங்கிட வேண்டும், கௌரவ விரிவுரையாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்திடல் வேண்டும், கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றும் காலத்துக்கான பண பலன்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம், அரசு ஊழியர் காப்பீட்டு மற்றும் மகப்பேறு விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்து கல்லூரியில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி