புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே, சேவியர் குடிக்காடு, நொண்டிமுனி கோவில் அருகே ஆலமரத்தில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆலமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இது குறித்து குளத்தூர் வட்டம் நாயக்கர் பட்டி சர்க்கிள் VAO ஆக பணிபுரியும் மாலதி அளித்த புகாரில் கந்தர்வகோட்டை காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.