புதுக்கோட்டை மாவட்டம், துவார் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி - சுகந்தி தம்பதியினரின் 25 நாள் பெண் குழந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது. நேற்று, 108 ஆம்புலன்ஸ் மூலம் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் துயரச் சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.