பைக் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே பெருங்கலூர் சாலையில் நேற்று கிருஷ்ணன் (69) என்பவர் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த காரை ஓட்டி வந்த ராஜேஷ் (37) மோதியதில் கிருஷ்ணன் படுகாயமடைந்தார். அவர் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி ராணி (52) அளித்த புகாரின் பேரில் ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி