கீரனுார் அருகே அம்மாச்சத்திரம் என்ற இடத்தில் பஸ் வந்தபோது, உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாக கருப்பையாவுக்கு செல்போனில் தகவல் வந்தது. உடனே பஸ்சை நிறுத்தி 3 பேரும் கீழே இறங்கி புதுக்கோட்டை செல்வதற்காக சாலையை கடக்க முயன்றனர். அப்போது திருச்சியில் இருந்து கொத்தமங்கலத்துக்கு வெங்காயம் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக கருப்பையா மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுபற்றி கீரனுார் போலீசார் வழக்குப்பதிந்து சரக்கு வாகன டிரைவர் சிவலிங்கத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.