புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்த இந்த நிகழ்வில், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.