கீரனூர் அருகே கார்கள் மோதி விபத்து

புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு மனோகரன்(48), முருகேசன் (55), குணா (43) ஆகிய மூவரும் காரில் பயணம் செய்தனர். அப்போது, கீரனூர் அடுத்த களம்பூர் பேருந்து நிறுத்தம் அருகே அவர்களுக்கு எதிரே காரை ஓட்டி வந்த பால்ராஜ் (45) மோதியதில் மூவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, அண்ணாமலை ஓட்டுநர் அளித்த புகாரில் கீரனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி