புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை அருகே புனல்குளம், அரியானிப்பட்டி, மஞ்சப்பேட்டை, மங்கனூர் கிராமங்களில் செயல்படும் கிராவல் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக அதிக அளவில் மண் வெட்டி எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இரவு பகலாக மண் கடத்தப்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.