இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் தனது அனுமதி இல்லாமல் எப்படி பிளக்ஸ் பேனர் வைக்கலாம் என்று கேட்டு தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அஜித்குமார், அவரது தந்தை நாடிமுத்து(50), சகோதரர் பிரசாந்த்(27) ஆகியோரை கட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த 3 பேரும் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் நாடிமுத்து, பிரசாந்த் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.