புதுக்கோட்டை: பைக் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்த ஒடுக்கூரை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (25). இவர் கீரனூரில் இருந்து பைக்கில் ஒடுக்கூருக்கு சென்றுள்ளார். அப்போது, குளத்தூர் பேக்கரி அருகே, அவருக்கு எதிரே காரில் வந்த அருண் (32) மோதியதில் ஞானப்பிரகாசத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, அவர் அளித்த புகாரில் கீரனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி