புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே துவார் ஊராட்சி எல்லைத்ரப்பட்டி கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்பு 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து, எல்லைத்தரப்பட்டி கிராமத்தில் குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் ஆழ்குழாய் கிணற்றிற்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.