கறம்பக்குடி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து பலி

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாணிப்பட்டியலிலிருந்து மோகனூருக்கு நேற்று பைக்கில் சென்றுகொண்டிருந்த செந்தில்குமார் (40) என்பவர், அம்மாணிப்பட்டி சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஸ்வேதா அளித்த புகாரின் பேரில் கறம்பக்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி