கறம்பக்குடியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

கறம்பக்குடி செட்டி தெருவைச் சேர்ந்த 55 வயதான பிரபாகரன், அதிக குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை அவரது உறவினர்கள் தேடியபோது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது பெற்றோர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவருக்கு 3 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கறம்பக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி