புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த அக்கட்சிப்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் (32) என்பவர், வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக தனது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி முருகவேணி (31) அளித்த புகாரின் பேரில், கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.