கந்தர்வகோட்டை அருகே வீடு புகுந்து கொள்ளை

கந்தர்வகோட்டை அருகே குரும்பூண்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு, ஜேம்ஸ் என்பவரின் வீட்டில் கதவை உடைத்து 12 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதேபோல், அதே பகுதியில் தனிக்லாஸ் என்பவரின் வீட்டிலும் 1 பவுன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து கந்தர்வகோட்டை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி