கறம்பக்குடி அப்பச்சி கோவில் அருகே திருமலை செல்வம் (38), பிரபாகரன் (36), யோகேந்திரன் (45), கலைக்கண்ணன் (35) ஆகிய 4 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கறம்பக்குடி போலீசார் அவர்களில் 3 பேரை கைது செய்தனர். மேலும் கலைக்கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்து ரூ. 400, 52 கார்டுகளை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.