கீரனூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் சென்னை டூ பரமக்குடி நோக்கி சென்ற ஆம்னி பேருந்து நேற்று அதிகாலை களம்மாவூர் ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த 65 வயது மூதாட்டி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் எதிரே வந்த பைக்கில் மோதியதில் தாமரைச்செல்வன் என்ற வாலிபர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி