கடையாத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரியநாயகி அம்மன் 37ஆம் ஆண்டு மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கிராமத்தில் உள்ள பெண்கள் தலையில் மதுவை சுமந்தபடி ஊர்வலமாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டன.