புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாளவயலில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் வசித்து வருகின்றனர். வெள்ளாளவயல் சத்திரப்பட்டி சாலை மிகவும் மோசமாக உள்ளதால் விவசாயத்திற்குத் தேவையான இடுபொருட்களைக் கொண்டு செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன் அமைச்சர் ரகுபதியிடம் மனு அளித்தும் இதுவரை சரிசெய்யவில்லை. இதனால் 2026 தேர்தலைப் புறக்கணிப்பதாக மக்கள் முடிவு செய்துள்ளனர்.