புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி லட்சுமி நகர் அருகே நேற்று கார்த்திக் என்பவர் பிக்கப் வாகனத்தில் மணல் கடத்த முயன்றார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி காவல்துறையினர் அவரை மடக்கி, வழக்கு பதிவு செய்தனர். அவரிடமிருந்து சுமார் 3/4 யூனிட் மணலும், பிக்கப் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.