மேற்பனைக்காடு: விஷ வண்டுகளை அகற்றும் பணி

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு ஊராட்சிப் பகுதியில் உள்ள முகமது ஹம்துல்லா என்பவரின் வீட்டில் விஷத்தன்மை கொண்ட கதண்டு வண்டுகள் கூடுகட்டியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து விஷவண்டுகளை அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி