ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி, அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா அரசங்கரை சோதனை சாவடியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் பகுதியை சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் ரூ. 84 ஆயிரம் கொண்டுவந்தது தெரியவந்தது. பணத்தை கைப்பற்றிய பறக்கும்படையினர் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் அறந்தாங்கி கோட்டாட்சியருமான சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
Motivational Quotes Tamil