இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் புதுகை மாவட்டத்தில் மின்னணு ஓட்டு மெஷின்கள், கட் டுப்பாட்டு கருவிகள், விவிபேட் இயந்திரங்களை 6 சட்டசபை தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப் பட்டது. இதற்கிடையே ஓட்டு மெஷினில் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது. அறந்தாங்கி ஆர்டிஓ அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரான ஆர் டிஓ சிவக்குமார் தலைமையில் பணிகள் நடந்தன. அறந்தாங்கி, ஆவுடையார் கோயில், மணமேல்குடி தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், ஓட்டுச்சாவடி மண்டல அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், விஏஓ மற்றும் கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்