அறந்தாங்கி அருகே பயங்கர விபத்து: இளைஞர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு பெட்ரோல் பங்க் பகுதியில் நேற்று முன்தினம் (மே 21) இரவு நடந்த சாலை விபத்தில் மேலப்பட்டு ரமேஷ் என்பவரின் மகன் கதிர் (25) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி