புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டரங்கில் விளையாட்டு சாதன பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஆறு பெட்டிகளில் இருந்த விளையாட்டு சாதன பொருட்கள் காணாமல் போனதாகவும், அதன் மதிப்பு ரூபாய் 50 ஆயிரத்துக்கும் மேல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் உள்ளரங்கில் இருந்த அரசுக்கு சொந்தமான விளையாட்டு சாதனங்கள் திருடு போன சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.