புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா நிலையூர் பகுதியில் நேற்று (மே 20) காலை முதல் வெயில் அதிகமாக காணப்பட்டது. மாலை ஐந்து மணிக்கு மேல் கடுமையான சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை வெயிலுக்கு நடுவே பெய்த மழை காரணமாக இதமான சூழல் நிலவியது.