புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டை முதல் வீதியைச் சேர்ந்த ரத்தினம் (76) மற்றும் அவரது மனைவி சரோஜா (66) ஆகியோர், தங்கள் பிள்ளைகள் தங்களைக் கவனிக்கவில்லை என்ற விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். 50 வருட திருமண வாழ்வில் ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தும், அவர்கள் தங்களைக் கவனிக்காததால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து ரத்தினத்தின் மகன் அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.