புதுக்கோட்டை: தேர்த்திருவிழாவில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பக்தர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இரண்டு நாளாக நடைபெற்றது. முதல் நாள் தேரோட்டத்தின் போது பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வரும்போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ்க்கு போலீசாரும், பக்தர்களும் இணைந்து வழி விட்டனர். இதனால் கூட்ட நெரிசலை ஆம்புலன்ஸ் விரைவாக கடந்து சென்றது.

தொடர்புடைய செய்தி