புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா காடத்திவயல் கிராமத்தில் நேதாஜி பிறந்தநாள் மற்றும் பாரி திருவிழாவை முன்னிட்டு மறவர் சமுதாயத்தால் நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் திரளான ரசிகர்கள் கண்டுகளித்தனர். இந்த பந்தயத்தில் சின்ன மாடு பிரிவில் 10 மாட்டுவண்டிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 15 மாட்டுவண்டிகளும், 6 பல்கன்று பிரிவில் 22 மாட்டுவண்டிகளும் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன. இதில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் உள்ள மாட்டுவண்டி உரிமையாளர்கள் தங்களது மாடுகளை கொண்டுவந்து பந்தயத்தில் கலந்துகொண்டனர். இதில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணமும் சேவலும் போன்றவை வழங்கப்பட்டன. சாலையின் இருபுறமும் பந்தய ரசிகர்கள் கண்டுகளித்தனர்.