மணமேல்குடி: பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அழகன்வயலை சேர்ந்தவர் சத்யபிரியா (26). இவருக்கு திருமணம் ஆகி 3 வருடமான நிலையில் ஒரு மகன் உள்ளார். கணவன் மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று (ஜூலை 4) மணமேல்குடி பாரதி நகரில் உள்ள அவரது வீட்டில் மின்விசிறியில் சேலையை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்யபிரியாவின் தந்தை அளித்த புகாரின்பேரில் மணமேல்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி