புதுக்கோட்டை மாவட்டம் குறிச்சிகுளம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு இன்று தேரோட்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தேரோட்ட நிகழ்வை காண அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணமேல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டன.