கோட்டைப்பட்டினம்: நடந்து சென்றவர் மீது.. வாகனம் மோதி விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கரகத்திக்கொட்டையைச் சேர்ந்த அழகர் (67) என்பவர் ஜெகதாபட்டினம் அருகே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு தப்பி சென்றது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் ஜெகதாபட்டினம் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி