புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உறவினர் வீட்டில் நகைகளை திருடிய கோ.சுந்தரராஜ்(40) என்பவரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். ஜெயபாரதி(38) என்பவரிடம் கடன் கேட்டபோது மறுத்ததால், அவர் பீரோவை உடைத்து 4 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றார். இதுகுறித்து புகாரளிக்கப்பட்டதை அடுத்து, கறம்பக்குடி போலீஸார் நடத்திய விசாரணையில் சுந்தரராஜ் திருடியது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.