மேல்மங்களம் வடக்கு கிராமத்தில் வீடு இடிந்து சேதம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேல்மங்களம் வடக்கு கிராமத்தில் முருகன் அஞ்சலை தேவி ஆகியோர் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இருசக்கர வாகனம் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் இடிந்து சேதமடைந்தது. வீட்டில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஒரு இழப்பீடும் அரசு வழங்கக்கூடிய வீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி