நாகுடி அருகே உள்ள காரணியானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பர்வீன் பானு. இவர் கடந்த 14ம் தேதி கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்தனர். இதற்கிடையே காளிதாசை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு புதுக்கை எஸ்பி அபிஷேக் குப்தா பரிந்துரை செய்தார். கலெக்டர் அருணா உத்தரவின் பேரில், காளிதாசை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று (ஜூலை 30) கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.