மாநில நீச்சல் போட்டிகளில் புதுகை மாணவர்கள் சாதனை!

பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளனர். சக்தி ஷிவானி, அகிலேஷ்நாத், கிர்த்திக் ஆகியோர் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல்வேறு பதக்கங்களை கைப்பற்றினர். இந்த சிறப்பான வெற்றியைத் தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி