புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கரூர் பகுதியில் இயங்கும் ஹார்டுவேர்ஸ் கடையில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே சம்பவம் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தகவல் வெளியாகி உள்ளது.