புதுக்கோட்டை மாவட்டம், எட்டியதளி பகுதியில் நேற்று (பிப்ரவரி 23) திங்கட்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாததால் அரசுக்கு கோரிக்கை வைத்த பொதுமக்கள், அது நிறைவேற்றப்படாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.