புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி LNபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ளோர் மார்ச் 27ஆம் தேதிக்குள் மாவட்ட சுகாதார துறை அலுவலகம் சென்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். நிரந்தரம் செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.