புதுக்கோட்டை: சாலையை சீரமைக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் சீனமங்கலம் பகுதியிலிருந்து அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அதனால் அந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் அதிக அளவில் நீர் தேங்கி விபத்துக்குள்ளாவதால் இதை கவனத்தில் கொண்டு சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி