புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதி திருவிழாவை முன்னிட்டு, இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.