அறந்தாங்கியில் கடையில் புகுந்து கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் & கான்கிரீட் ஒர்க் கடையில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகள் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கடையின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே இறங்கி இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி